ஒன்று விளையாட்டிற்கு திரு.சுகுணா திவாகர் என்னை அழைத்திருக்கிறார். அவர் அழைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியே ஆனால் அவர் எழுப்பியிருக்கும் கேள்வி உள்ளடக்கத்தில் கணமானது என்பதும் அதனை எல்லோருக்கும் விளங்கும்படி விளக்குவதற்கு, கம்யூனிச கல்வியில் ஓராண்டு பரிச்சயம் மட்டுமே கொண்டிருக்கும் மார்க்சிய மாணவனாகிய எனக்கு கொஞ்சம் கடினம்தான் என்பதனையும் மறைக்காமல் நான் சொல்லியாக வேண்டும், அதிலும் இந்த பாழாய் போன விளையாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் 24 மணிநேரத்தில் தூங்கும் நேரம், அலுவலக வேலை நேரம், ஏற்கனவே திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேறு சில வேலை நேரம் போக கிடைக்கின்ற சொற்ப நேரத்தில் புரியும் படி விவரமாக எழுதுவது என்பதும் கொஞ்சம் கடினமானதே. நண்பர் லக்கிலுக் இறுதியில் வந்து தாவு தீருது என்று சொல்லிடுவாரோ என்ற அச்சத்தோடே எனது பதிலை பதிவிடுகிறேன் .
கேள்வி: சோசலிச் கட்டுமானம், வர்க்கங்களைத்தாண்டியும் மருத்துவமனை கல்விக்கூடம் போன்ற நிறுவனங்களில் தொழிற்படும் நுன்அதிகாரம் பாலியல் அரசியல், தனித்துவமான பெண்ணியம், தலித்துகள், கருப்பர்கள், போன்ற மக்கட்குழுவினர் இவைகளை குறித்து பேசும், கோட்பாடுகளிலிருந்து இந்திய புரட்சியாளர்கள் கற்றுக் கொள்ள எதுவுமே இல்லையா?
பண்மைத்துவத்தை அழித்து அதனை ஒற்றை அடையாளமாக மையப்படுத்துவது அவ்வாறு மையப்படுத்துதலின் விளைவாக ஏற்படும் அதிகாரத்துவம், என்ற பின்நவீன கோட்பாட்டிலிருந்து இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறார் திரு.சுகுணா.
சோசலிச கட்டுமானத்தில் இருக்கும் நுண் அதிகாரம்:
முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் சோசலிசம் என்பது பொதுவுடைமை சமூகத்திற்கு மாறிச்செல்லும் இடைக்காலகட்டம்தானே ஒழிய அது வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்துவிட்ட கம்யூனிச சமூகமல்ல. சோசலிச காலகட்டத்திலும் வர்க்கங்கள் இருக்கின்றன. அவை அழியாததன் காரணமாக தொடர்ந்து வர்க்கப்போராட்டமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு மாற்றம் என்னவெனில் இன்றைய ஆளும் வர்க்கமாகிய முதலாளித்துவத்தை வீழ்த்திவிட்டு பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறது.
“வர்க்கப்பகைமைகள் இணக்கம் காணமுடியாததன் விளைவாய் தோன்றியதே அரசு” என்றார் மார்கஸ். அதாவது வர்க்கங்களுக்கு இடையில் நடக்கின்ற மோதல் முற்றுப்பெறாமல் பேரழிவு ஏற்படுத்தி தம்மையும் சமூகத்தையும் பயணற்ற சண்டையில் அழித்துகொள்ளாமல் இருக்க வேண்டுமென்பதற்காக அந்த சமூகத்திலிருந்தே தோன்றி ஆனால் அதற்கு மேலே தன்னை இருத்திக்கொண்டு. மோதலை மட்டுப்படுத்தி தன்னை ஒரு நடுநிலையானதாக காட்டிகொள்வதாகவே அரசு தோன்றியது. இங்கு மட்டுப்படுத்துதல் என்று குறிப்பிடப்படுவது போராடுகின்ற வர்க்கத்திடமிருந்து ஆயுதத்தையும், போராட்டமுறையையும் பறித்துகொள்வதுதானே தவிர வர்க்கங்களிடையே சமரசத்தை ஏற்படுத்துவதல்ல என்பதனை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மேலே இருக்கக்கூடிய அரசு பற்றிய மார்க்சியத்தினுடைய அறிவியல் பூர்வமான போதனையிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவெனில், அரசு என்ற ஒன்று இருப்பதே அங்கு பகைமை பாராட்டுகிற வர்க்கங்கள் இருக்கின்றன என்பதன் வெளிப்பாடே. மேலும் அந்த அரசானது போராடுகின்ற வர்க்கங்களின் ஆயுதங்கள் மற்றும் போராட்டமுறைகளை பறித்து கொண்டு மோதலை தடுக்கின்ற பெயரில் போராடுகின்ற வர்க்கத்தை நிராயுதபாணியாக்கி அதனை பலவீனப்படுத்துகிறது, இல்லாவிட்டால் தமது போலீசு இராணுவம் இவற்றை கொண்டு ஒடுக்குகிறது.
இதன் காரணமாகவே அது ஆளும் வர்க்கத்தினுடைய ஒடுக்குமுறை கருவியாக இருக்கிறது.
உதாரணமாக தமது உரிமைக்காக ஹோண்டா தொழிலாளர்கள் போராடும் போது “சுமூக நிலையை” கொண்டுவருவது என்ற பெயரில் கொடூரமாக அவர்களை அடித்து நொறுக்கி அமைதியை நிலைநாட்டுகிறது அரசு. இதுதான் அரசு வர்க்கங்களுக்கிடையில் மோதலை மட்டுபடுத்தும் முறை அதாவது, ஒடுக்கப்படுகின்ற மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதன் மூலமாக அவர்களுக்கான ஜனநாயகத்தை மறுப்பதன் மூலமாக மோதலை தடுக்கிறது அரசு. தனக்கென கொண்டிருக்கும் போலீசு, இராணுவம் போன்ற அடியாள் படைகளை கொண்டு ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் ஒடுக்குமுறை கருவியாகவே அரசு செயல்படுகிறது.
“ஜனநாயகத்தை பற்றி ஒரு மிதவாதி என்ன கருத்துவேண்டுமானாலும் கொண்டிருக்கலாம் ஆனால் ஒரு மார்க்சியவாதி ஜனநாயகம் என்றால் எந்த வர்க்கத்துக்கானது என்று கேட்பான்” என்றார் லெனின். அரசு என்பது ஒரு வர்க்கத்துக்கான ஒடுக்குமுறை கருவியாக இருக்கும் போது ஒரு வர்க்கத்தினுடைய முனைப்புகள் மறுக்கப்படும் போது அங்கு நிலவுகிற ஜனநாயகம் எந்த வர்க்கத்துக்கானது என்று கேள்வி எழுப்புவது அவசியமானதாக இருக்கிறது.
இப்போது திரு.சுகுணாவினுடைய கேள்விக்கு வருவோம், சோசலிச கட்டுமானத்தில் தொழிற்படுகின்ற நுண் அதிகாரம் எதன்பாற்பட்டது.
அங்கு அரசு என்ற ஒன்று நிலவுவதே அங்கு அதிகாரத்திற்கான ஒடுக்குமுறை கருவி இன்னும் நீடித்திருக்கிறது என்பதன் வெளிப்பாடே. இதனை ஒழிக்க வேண்டுமானால் வர்க்கங்களை ஒழித்தாக வேண்டும், வர்க்கங்களை ஒழிப்பது என்றால் உற்பத்தி சாதனங்களின் தனியுடைமையை ஒழித்து, உற்பத்தி உறவுகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இதன் காரணமாகவே சோசலிச உற்பத்தி முறை கொண்டுவரபடுகிறது. அனைவருக்கும் உழைப்பு, சக்திக்கேற்ற உழைப்பு, உழைப்புகேற்ற ஊதியம் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன. உடைமை உறவுகளில் மாற்றம் செய்யப்படுகின்றன, விவசாய உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு கூட்டுப்பண்ணை அறிமுகப்படுத்தப்படுகின்றன. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான முரண்பாட்டை ஒழிப்பது, உடலுழைப்புக்கும் மூளை உழைப்புக்குமான முரண்பாட்டை ஒழிப்பது, தொழிலாளிக்கும் விவசாயிக்குமான முரண்பாட்டை ஒழிப்பது. மக்களை நிர்வாகத்தில் பங்கேற்கச் செய்வதன் மூலமாக அரசுக்கும் மக்களுக்குமிடையில் உள்ள இடைவெளியை குறைத்து அரசு உதிர்ந்து உலருகின்ற ஒரு கம்யூனிச சமூகத்திற்கு மக்களை தயார்படுத்துவது என்பவற்றை முன்வைத்து சோசலிச அரசு செயல்படுகிறது.
ஆனால் வீழ்த்தபட்ட முதலாளித்துவமோ மீண்டும் தனது அதிகாரத்தை நிறுவி கொள்வதற்கான போராட்டத்தில் இடையறாது ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறது.
தன்னை மீட்டுருவாக்கி கொண்டு அதிகார ருசி பார்க்க துடிக்கும் சுரண்டும் வர்க்கத்தின் இந்த முனைப்பை சோசலிச அரசு எதிர்கொள்கிறது. சுரண்டும் வர்க்கத்தின் இந்த போராட்ட முறைகளையும் ஆயுதங்களையும் பறிப்பதன் மூலமாக பெருந்திரளான மக்களின் ஜனநாயகத்தையும், ஏற்ற தாழ்வுகளற்ற சுரண்டலற்ற கம்யூனிச சமூகம் எனும் உன்னத இலட்சியத்தையும் காக்கின்ற பாட்டாளி வர்க்கத்தின் கேடயமாக செயல்படுகிறது சோசலிச அரசு. ஆக அதிகாரம் என்பது இங்கு பெருந்திரளான மக்களின் அதிகாரமாக நிலவுகிறது.
லட்சக்கணக்கில் தொடரும் விவசாயத் தற்கொலைகள், போராடுவோர் மீது கொடும் அடக்குமுறை, ஆயுதம் தாங்கி போராடுவோர் போலி மோதல்களில் கொலை, லஞ்சம், ஊழல் இன்னும் என்னென்ன சீர்கேடுகள் இருக்கின்றனவோ அதனை எல்லாம் வைத்துக்கொண்டு அதனை ஜனநாயகம் என்று பீற்றி கொள்கிற முதலாளித்துவ அரசு போன்று இல்லாமல். பாட்டாளி வர்க்கம் பெரும்திரளான உழைக்கும் மக்களுக்காக செயற்படுத்தப்பட்டிருக்கும் ஜனநாயகத்தை ‘பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற நேர்பொருளிலேயே’ குறிப்பிடுகிறது.
இதனைத்தான் பின்நவீனத்துவவாதிகள் உள்ளடக்கத்தை மாற்றினால் மட்டும் போதாது வடிவத்தையும் மாற்ற வேண்டும் என்கின்றனர், சில நாட்களுக்கு முன்னால் சோபா சக்தி ஒரு நேர்காணலில் முதலாளித்துவத்தின் மையப்படுத்தப்பட்ட் வடிவத்திற்கு மாற்றாக, அதே அமைப்பு வடிவத்தை முன்வைக்க கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். ‘ஒரு டோட்டலிசத்தை வீழ்த்துவதற்கு இன்னொரு டோட்டலிசம் தீர்வு என்றால் அதற்கும் இதற்கும் இடையில் ஒரு மயிரளவு கூட வேறுபாடு கிடையாது” என்று கோபப்படுகிறார் அ.மார்க்ஸ்.
சரி இந்த மயிரளவில் நுணுக்கமாக ஆய்வு செய்யும் அறிவு ஜீவிகள் முதலாளித்துவம் பயங்கரவாதமாக பரிணமித்திருக்கும் இன்றைய சூழலுக்கு எதிராக என்ன செய்கிறார்கள் என்றால் ஒரு மயிரும் கிடையாது என்பதுதான் பதில். அமைப்பாக திரளுவதையே டோட்டலிசம் என்று சொல்லி நிராகரித்துவிட்ட பிறகு வேறு என்ன செய்வது “குவாட்டர் அடித்துவிட்டு குப்புற படுத்துக் கொள்ள வேண்டியதுதான்”.
இரண்டு விதமாக மையப்படுத்தல்களையும் இப்படி கண்மூடித்தனமாக ஏசும் நமது அறிவு ஜீவிகளுக்கு தோழர் லெனினுடைய வார்த்தைகளையே நாம் பதிலாக் கொடுக்க முடியும். ஒருமுறை ஒரு அதிமேதாவி இது போன்றதொரு வாதத்தை தோழர் லெனினிடம் முன்வைத்தார் அதாவது முதலாளித்துவ மையப்படுத்துதலுக்கு மாறக பாட்டாளி வர்க்க மையப்படுத்துதல் என்பது கட்சியை தொழிற்சாலை போல மாற்றிவைத்திருக்கிறது என்று கடிந்து கொண்டார் அவர். அதற்கு பதில் கூறிய லெனின் சுரண்டலுக்கான சாதனம் என்ற வகையில் தொழிற்சாலை இருப்பதையும், தொழிலாளர்களை அமைப்பாக்குகிற அவர்களுக்குள் கூட்டுறவை ஏற்படுத்துகிற அமைப்புக்கான சாதனம் என்ற வகையில் தொழிற்சாலை இருப்பதையும் புரிந்து கொள்லாமல் இந்த கேடுகெட்ட வாதத்தை நீங்கள் வைக்கிறீர்கள் என்று பதிலளித்தார்.
அந்த அறிவாளியின் குரலிலேதான் இன்று பின்நவீனத்துவவாதிகளும் பேசி கொண்டிருக்கிறார்கள், ஒழுங்கமைக்கப்பட்ட முதலாளித்துவத்திற்கு மாற்றாக ஒரு பாட்டாளி வர்க்க அமைப்பை இவர்கள் நிராகரிகிறார்கள் இதன் காரணமாக ஒடுக்குமுறை கருவியாக சட்டபூர்வமாக சமூகத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கும் அரசினை நிலைத்திருக்கச் செய்கிறார்கள். அதிகாரத்தின் குவிமையமாக இருக்கும் அரசினை மறைத்துக்கொண்டு அதற்கு எதிராக திரளுகிற மக்களிடம் டோட்டலிசம் தேவையில்லை அது அதிகாரத்துவத்தின் வெளிப்பாடு என்று போதிக்கும் இந்த அறிவு ஜீவிகளின் வாதங்கள் எவ்வளவு கருங்காலித்தனமானது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவர்கள் பயங்கரவாதமாக பரிணமித்திருக்கும் முதலாளித்துவ அரசினை வீழ்த்துவது குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள், ஒடுக்குமுறை கருவியாக இருக்கும் அரசு உதிர்ந்து உலர்ந்து போகும் என்று அவர்கள் கருதுகிறார்களா அல்லது அதனை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று நினைக்கிறார்களா? அப்படி ஒழித்துக்கட்டினால சமூகத்தின் இயக்கம் எப்படிப் பட்டதாக இருக்கும்? இது குறித்தெல்லாம் அவர்களிடம் கேள்வி எழுப்பக்கூடாது. இப்படி மொத்ததுவமான முடிவை கோருவது பேரதிகாரம் என்று நம்மை கட்டுடைக்க துவங்கிவிடுவார்கள். சோசலிசத்தில் நிலவும் நுண் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்புபவர்கள் மூலதனத்தின் அதிகாரத்தை எப்படி வீழ்த்துவது அதனிடத்தில் எதனை கொண்டு நிரப்புவது என்ற உரையாடலை துவக்கினால் நாம் மேலும் பேசுவதற்கு வசதியாக இருக்கும்.
வித்தியாசங்களின் அரசியல்:
ஒடுக்கப்படுகின்ற மக்கள் அமைப்பு ரீதியாக ஐக்கியப்படுவதை, மையத்துவம், அதிகாரத்துவம என்ற பெயரில் மேற்சொன்னவாறு நிராகரிக்கும் பின்நவீனத்துவவாதிகள் அடுத்து கோட்பாட்டு ரீதியாக ஐக்கியப்படுவதையும் பிரச்சணைகளை மையப்படுத்துவது என்ற பெயரில் நிராகரிக்க துவங்குகிறார்கள். அதற்கென பாலியல் அரசியல், பெண்ணியம், தலித்தியம், கருப்பியம் போன்றவற்றை விளிம்புநிலை கோட்பாடு என்ற பெயரில் முன் தள்ளுகிறார்கள். இதுதான் மார்க்சியம் என்று இவர்கள் சொல்வதுதான் கொஞ்சம் அதிர்ச்சியானது. அதாவது வர்க்கத்தை முன்வைத்து போராடுபவர்களை கட்சி சார்ந்த மார்க்சியர்கள் என்றும் இவர்கள் நவீன கட்சி சாராத மார்க்சியர்கள் என்றும் தங்களை சொல்லிக்கொள்கிறார்கள்(உதா: உதயம் எனும் சிறுபத்திரிக்கையில் வெளிவந்த பிரேம்-ரமேசின் நேர்காணல்).
சோசலிச முகாம பலப்பட்ட காலத்திலிருந்தே அதனை எதிர்த்து வீழ்த்தமுடியாது என்று புரிந்து கொண்ட ஏகாதிபத்தியங்கள் அதற்கு எதிராக மார்க்சியத்தை திரித்து புரட்டுகின்ற வகையில் பல வகை கோட்பாடுகளை முன்வைத்தார்கள்.அவை வர்க்கம், வர்க்கப்போராட்டம் மற்றும் வர்க்க சித்தாந்த காலகட்டம் இனிமேலும் சாத்தியமில்லை காலாவதியாகிவிட்டது என்னும் வகைப்பட்டதாகவே இருந்தது. இன்று பின்நவீனத்துவவாதிகள் வித்தியாசங்களின் அரசியல் என்ற பெயரில் முன்வைக்கும் விளிம்பு நிலைக்கோட்பாடும் வர்க்கமற்ற அரசியல் எனும் அந்தவகைப்பட்டதே என்பதில் எள் முனையும் அய்யமில்லை.
சமூகம் என்பது உற்பத்தியை அடித்தளமாக கொண்டது, உற்பத்தி முறையையே சமூகத்தின் அடிக்கட்டுமானம் என்றும் மற்றவை அதன் மேற்கட்டுமானங்களே என்கிறது மார்க்சியத்தின் அரிச்சுவடி. இதனை ஏற்றுக்கொள்ளும் பின்நவீனத்துவவாதிகள் அந்த அடிகட்டுமானத்தில் ஏற்படுகின்ற உறபத்தி உறவுகளின் பாற்பட்டதே வர்க்கம் என்பதனை நிராகரித்துவிட்டு வர்க்கமற்ற விளிம்பு நிலை கோட்பாட்டை முன் தள்ளுவதானது உள் நோக்கம் கொண்டது என்பது தெள்ள தெளிவு. அந்த உள்நோக்கம் ஏகாதிபத்தியத்தின் நலனை காக்கும் ஏற்பாடு என்பதனை நிச்சயம் காலம் நிரூபிக்கும்.
பாலியல் அரசியல், தனித்துவமான பெண்ணியம், தலித்துகள், கருப்பர்கள், போன்ற மக்கட்குழுவினர் இவைகளை குறித்து பேசும், கோட்பாடுகளிலிருந்து இந்திய புரட்சியாளர்கள் கற்றுக் கொள்ள எதுவுமே இல்லையா?
என்று ஆதங்கபடுகிறார் நண்பர் சுகுணா திவாகர், ஏன் இல்லை இந்த விளிம்பு நிலைக் கோட்பாட்டிலிருந்து இது ஆளும் வர்க்கத்தின் வார்த்தைஜாலமே என்பதனையும், இதனை கொண்டு கலகக்காரனாக காட்டிக்கொள்ளலாம் ஆனால் புரட்சியை சாதிக்க முடியாது என்பதனையும் வர்க்கமற்ற அரசியல் என்று முன் தள்ளப்படும் அரசியல் மார்சியத்தின் உயிரோட்டத்தை எடுத்துவிட்டு வெறுமனே வாய்சவடால் அடிக்கவே பயன்படும் என்பதனையும் புரிந்து கொள்ளவேண்டும், வர்க்கமற்ற அரசியல் எப்படி சீரழிந்த தனமைக்கு போகும் என்பதற்கு நிறப்பிரிகையின் தளபதியாய் இருந்து கொண்டு தலித்திய அரசியலை மீண்டும் மீண்டும் வலியுறுத்திய திரு. ரவிக்குமார் எம்.எல்.ஏ அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகளின் சீரழிந்த தன்மையே அதற்கு சான்று என்பதனையும் நடைமுறை உதாரணமாக கொண்டு புரட்சியாளர்கள் படிப்பினை பெற வேண்டும்.
என்னுடைய கேள்வி பதிவர் சந்திப்புக்கு:
மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவர்கள், நீங்கள் அவர்களை தயார் செய்வீர்களா அல்லது அவர்களே தயாராகி விடுவார்களா நீங்கள்தான் தயார் செய்வீர்கள் எனில் எந்த வழியில்?
Tuesday, July 24
Tuesday, July 24
Subscribe to:
Post Comments (Atom)


12 comments:
//என்னுடைய கேள்வி பதிவர் சந்திப்புக்கு:
மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவர்கள், நீங்கள் அவர்களை தயார் செய்வீர்களா அல்லது அவர்களே தயாராகி விடுவார்களா நீங்கள்தான் தயார் செய்வீர்கள் எனில் எந்த வழியில்?//
:-))))
கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறீர்கள். ஆயினும் தோழர் சந்திப்பு சமாளித்துவிடுவார் என்றே நம்புகிறேன்.
எந்த நேரத்தில் பாலா தொடங்கி வைத்தாரோ.. புரட்சியைத் தேடும் விளையாட்டாக போய்க்கொண்டிருக்கிறது.. நண்பர் சந்திப்பு 24 மணிநேரத்தில் இந்தப்பக்கம் வருவாரா? :)))))))))
வருகைக்கு நன்றி லக்கி, தாவு தீரலையே., சொல்லாமலே போய்விட்டீர்கள் :-)
ஸ்டாலின்
தோழி பொன்ஸ்,
என்னதான் பாலா இந்த விளையாட்டை துவக்கி வைத்திருந்தாலும் கூட, இதனை ஆரோக்கியமாக மாற்றியது நண்பர் லக்கிதான். அதற்கு நாம் அவருக்குதான் நன்றி கூற வேண்டும் :-)(கோபத்தில் அவரை அடித்துவிடாதீர்கள்). எனக்கு தெரிந்தவரை பதிவர் சந்திப்பு காட்டில் இல்லை சென்னை நகரத்தில் இருப்பதாகவே அறிகிறேன். ஆகவே அவர் வந்து பதிலளிப்பார் என்பது என் நம்பிக்கை ஆனால், நந்திகிராமம் பிரச்சனைக்கு பிறகு அடிக்கடி காலை வாரி கொண்டிருக்கும் அவரது இண்டெர்நெட் கனெக்சன் இப்போது சரியாகிவிட்டதா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. சரி இன்னும் 24 மணி நேரம் பொறுத்திருப்போம், சந்திப்பு வராவிட்டால் விட்ட இடத்திலிருந்து ஆட்டத்தை தொடங்குவோம். வருகைக்கு நன்றி தோழி.பொன்ஸ்.. அடிக்கடி இந்த பக்கம் வாருங்கள்!!
புரட்சியை எதிர் நோக்கும் இளைஞர்களே! புரட்சிக்கான பாதை... எந்தப் பாதை? சந்திப்பின் இந்தப் பாதையே இந்திய புரட்சிப் பாதை!
http://santhipu.blogspot.com/2007/07/blog-post_24.html
ஸ்டாலின் தற்போது எங்கள் அலுவலகத்தில் நெட் கனக்சனை மாற்றி விட்டோம். நாங்க எப்பவுமே ரெடிதான்...
//போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.
இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள்.
அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.
போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம்.
போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.
ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது.
போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.
என்னிடம் ஒரு தீர்வு இல்லாத போது நான் கேள்விகேட்கும் தகுதி இழந்து விடுகிறேனா .
தீர்வு இருப்பதாலேயே நீங்கள் பின்னவீனதுவத்தை நிராகரிக்கலாமா?
//இவர்கள் பயங்கரவாதமாக பரிணமித்திருக்கும் முதலாளித்துவ அரசினை வீழ்த்துவது குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள், ஒடுக்குமுறை கருவியாக இருக்கும் அரசு உதிர்ந்து உலர்ந்து போகும் என்று அவர்கள் கருதுகிறார்களா அல்லது அதனை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று நினைக்கிறார்களா? அப்படி ஒழித்துக்கட்டினால சமூகத்தின் இயக்கம் எப்படிப் பட்டதாக இருக்கும்? இது குறித்தெல்லாம் அவர்களிடம் கேள்வி எழுப்பக்கூடாது. இப்படி மொத்ததுவமான முடிவை கோருவது பேரதிகாரம் என்று நம்மை கட்டுடைக்க துவங்கிவிடுவார்கள். சோசலிசத்தில் நிலவும் நுண் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்புபவர்கள் மூலதனத்தின் அதிகாரத்தை எப்படி வீழ்த்துவது அதனிடத்தில் எதனை கொண்டு நிரப்புவது என்ற உரையாடலை துவக்கினால் நாம் மேலும் பேசுவதற்கு வசதியாக இருக்கும்.
//
என்னுடைய கேள்வி பதிவர் சந்திப்புக்கு:
மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவர்கள், நீங்கள் அவர்களை தயார் செய்வீர்களா அல்லது அவர்களே தயாராகி விடுவார்களா நீங்கள்தான் தயார் செய்வீர்கள் எனில் எந்த வழியில்?
//
சரியான கேள்விகள்...
வாழ்த்துக்கள்
புத்தகப்பிரியன்
தோழர் ஸ்டாலின்
மார்க்சியம் படிக்கவேண்டிய அவசியத்தை உணர்கிறேன். நிறைய தகவல்களை எதார்த்த நடையில் சொல்லியமைக்கு நன்றி.
சந்திப்பு கட்சியில் நான் இரண்டாவது தலைமுறை, உங்கள் கேள்விக்கு பதிலலிப்பது தீக்கதிரில் எழுதுவது போன்ற எளிமையான காரியமல்ல என்பது எனக்குத் தெரியும்.
இப்போதெல்லாம் மரர்க்சியம் பற்றி கருணாநிதியோ மண்மோகனோ எதுவுமே சொல்லுவதில்லையே!!, ஒருவேளை ப்ரதீபா பாட்டீலைக்கேட்டு ஏதாவது பதில் சொல்வாரோ... சந்திப்பு.
இல்லையேல் இப்படிப்பட்ட உளறல்களைத் தவிர்த்திருப்பார்.
////புரட்சியை எதிர் நோக்கும் இளைஞர்களே! புரட்சிக்கான பாதை... எந்தப் பாதை? சந்திப்பின் இந்தப் பாதையே இந்திய புரட்சிப் பாதை!////
தோழர் ஸ்டாலின்
சந்திப்பு மவுனவிரத்தில் இருக்கிறாரா!? அல்லது விரக்தியில் blogல் நம்மைத் தவிர்க்கிறாரா?!.
இன்றைய திருத்தல்வாதிகலும் வறட்டு கோட்பாட்டுவாதிகலும் சமூக வாழ்க்கை பற்றிய தங்கலுடைய அகல் விரிவான அனுகுமுறையை பற்றி உரக்க பேசுகிறர்கள் ,அவர்கள் சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் பகுப்பாய்வு செய்வதாக பெருமை பேசுகிறர்ர்கள்.ஆனால் அவர்கள் அகல் விரிவு எனும் கோட்பாட்டை மிகவும் அகல் விரிவான முறையில் பொருள்ப்டுத்தி உபயோகிப்பதால் அதன் சாராம்சத்தை திரிக்கிறார்கள்.ஆராயப்படுகின்ற நிகழ்சி போக்கு அல்லது புலப்பாட்டின் விவரங்கள்,அம்சங்கள்,கூருகள்,அனைத்தையும் எடுத்துக்கொள்ள முற்ப்படுவதால் அவர்கள் அதன் சாராம்சத்தை அதன் தலையாய அம்சத்தை புறக்கனிக்கிறார்கள், இத்தகைய அகல்விரிவான ஆராய்ச்சி முடிவில் அற்யொணாவாதத்துக்கும் ஆராயப்படுகின்ற நிகழ்சி போக்கின் தோற்றுவாயை சுட்டி காட்டவும் அதன் வடிவங்கலையும் பொது போக்கையும் வெளி கொனரவும் இயலாமைக்கும் இட்டுசெல்கிறது ;நடைமுறையில் புரட்சிகர நிகழ்ச்கி போக்கின் பொது நியதிகலை வர்க்க போராட்டத்தின் விதிகலை சோஸலிஸ்ட் நிர்மானத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தை மற்றும் இதறவற்றை புறக்கனிக்க இட்டு செல்கிறது
கிரபிவின் இயக்கவியல் பொருள்முதல்வாதம் நூலிலிருந்து வர்க்கமற்ற புனிதர்கலுக்காக(பின் நவீனத்துவ பிறவிகள்)
இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன் திருவாளர்கள் பிண்நவீனத்துவவாதிகளே நீங்கலெல்லாம் எந்த வர்க்கத்தின் சிந்தனாவாதிகள்???????
ஸ்டாலின் குரு
Post a Comment